மணப்பாறை அருகே சொத்து தகராறில் அண்ணனை வெட்டி கொன்றார் தம்பி
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேங்குடியை சேர்ந்த கந்தசாமியின் மகன் கருப்பன் வயது 55 இவரது தம்பி சின்னதுரை வயது 50 உடையாப்பட்டியில் வசித்துவந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேங்குடியை சேர்ந்த கந்தசாமியின் மகன் கருப்பன் வயது 55 இவரது தம்பி சின்னதுரை வயது 50 உடையாப்பட்டியில் வசித்துவந்தார்.
இருவருக்கும் இடையே வெகு நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் கருப்பன் வீட்டு மரத்தை சின்னதுரை வெட்டியதாக இருவருக்கும் மீண்டும் சண்டை நடந்துள்ளது. இதையடுத்து நேற்று நள்ளிரவில் வீட்டின் வாசலில் தூங்கி கொண்டிருந்த கருப்பனை தம்பி சின்னதுரை தனது ஆதரவாளர்களுடன் சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து மணப்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.