முகப்பு
தற்போதைய செய்திகள்

சாலையோர மரத்தில் மோதி அரசு பேருந்து விபத்து: ஒருவர் பலி

திருப்பூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று விளக்குடி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் மருதவனம் பகுதியைச்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:49 AM
பகிர்:

திருப்பூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று விளக்குடி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் மருதவனம் பகுதியைச் சேர்ந்த ஜான்சிராணி என்ற பெண் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். காடமடைந்த பேருந்து ஓட்டுனர் ஜான் பௌல்ராஜ், நடத்துனர் உள்ளிட்ட 13 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பொதுமக்கள் கூறும்போது, விபத்து நடந்ததும் 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தும் 1 மணி  நேரம் தாமதாகவே வந்தது.இதனால் படுகாயம் அடைந்த ஜான்சியை அரசு பேருந்து ஒன்றில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார்.ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →