தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் ஈராக்கிலிருந்து மதுரை வருகை
ஈராக் நாட்டில் உள்நாட்டுப் போர் நடப்பதையொட்டி அங்கு வேலைக்காக சென்றுள்ள பெரும்பாலான இந்தியர்கள் சிக்கித் தவித்துவந்தனர்.அவர்கள் இந்திய தூதரகம் மூலம் அவர்கள்
ஈராக்கிலிருந்து 13 தமிழர்கள் இன்று மதுரை வந்தடைந்தனர்.
ஈராக் நாட்டில் உள்நாட்டுப் போர் நடப்பதையொட்டி அங்கு வேலைக்காக சென்றுள்ள பெரும்பாலான இந்தியர்கள் சிக்கித் தவித்துவந்தனர்.அவர்கள் இந்திய தூதரகம் மூலம் அவர்கள் மீட்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று சிவகங்கையைச் சேர்ந்த 4 பேர், திண்டுக்கலைச் சேர்ந்த ஒருவர், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 4 பேர் மற்றும் மதுரையைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 13 பேர் ஈராக்கிலிருந்து மதுரை வந்தடைந்தனர்.