தற்போதைய செய்திகள்

திண்டுக்கல் அருகே ரயிலில் அடிப்பட்டு அஸ்ஸாம் மாநில முதியவர் சாவு

திண்டுக்கல் அடுத்துள்ள தாமரைப்பாடி ரயில் நிலையத்தின் அருகே, குர்லாவிலிருந்து மதுரைக்கு சனிக்கிழமை வந்த விரைவு ரயிலில் பயணித்தவர், தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ

ஆ. நங்கையார் மணி

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர், திண்டுக்கல் அருகே ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தார்.

திண்டுக்கல் அடுத்துள்ள தாமரைப்பாடி ரயில் நிலையத்தின் அருகே, குர்லாவிலிருந்து மதுரைக்கு சனிக்கிழமை வந்த விரைவு ரயிலில் பயணித்தவர், தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீஸார், விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்தவரின் சட்டைப் பையில் வாக்காளர் அடையாள அட்டை இருந்துள்ளது. அதன்மூலம் உயிரிழந்தவர் அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி அடுத்துள்ள தட்ஷின் தினாப்பூர் பகுதியைச் சேர்ந்த பகன் உபாஸ்(54) என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு கடந்த 9ஆம் தேதியும், பின்னர் 11ஆம் தேதி சென்னையிலிருந்து மதுரைக்கும் எடுக்கப்பட்ட உடனடி பயணச்சீட்டும் சட்டைப்பையில் இருந்துள்ளன. இதன் மூலம் கொல்கத்தாவிலிருந்து, அவர் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மேலும் விசாரித்து வரும் ரயில்வே போலீஸார், அவரது உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT