முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அரசு பள்ளி விடுதியை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரி

ஆதிதிராவிட நலத்துறை மூலம் செயல்படும் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி உணவகத்தில் உணவு சரியாக இல்லை என்று புகார் செய்து விடுதி மாணவர்கள் திங்கள்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:53 AM
பகிர்:

சிதம்பரம் அரசு நந்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி விடுதி உணவகத்தை கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

ஆதிதிராவிட நலத்துறை மூலம் செயல்படும் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி உணவகத்தில் உணவு சரியாக இல்லை என்று புகார் செய்து விடுதி மாணவர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா, ஆய்வாளர்கள் மாரிமுத்து (குமராட்சி), பத்மநாபன் (சிதம்பரம்) ஆகியோர் உணவு விடுதியினை ஆய்வு செய்தனர்.

அப்போது மாணவர்கள் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதில்லை, சாம்பாரில் காய்கறிகள் போடுவதில்லை, வெளியாட்கள் உள்ளே வருவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தார். ஆய்வின் போது சமையலறை அசுத்தமாகவும், சுகாதாரக் கேடாகவும் இருந்ததும், உணவு சரியாகவில்லை என்பதை கண்டறித்து விடுதி வார்டன் மற்றும் சமையலர்களை எச்சரிக்கை செய்தார்.  சமையலறையை சுத்தமாக வைத்து, சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் என உணவு பாதுகாப்பு அதிகாரி வார்டன் மற்றும் சமையலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.