முகப்பு
தற்போதைய செய்திகள்

கொத்தடிமை தொழிலாளர் தலைமறைவானதால் சிறைபிடிக்கப்பட்ட அவரது தாய்: ஜவ்வரிசி ஆலை உரிமையாளரிடம் விசாரணை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 3 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை பார்த்த இளைஞர் குடும்பத்துடன் தலைமறைவானதால், அவரது தாயை சிறை பிடித்த ஜவ்வரிசி ஆலை உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மீட்கப்பட்ட பெண் அரசு மருத்துவ மனையில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:53 AM
பகிர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 3 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை பார்த்த இளைஞர் குடும்பத்துடன் தலைமறைவானதால், அவரது தாயை சிறை பிடித்த ஜவ்வரிசி ஆலை உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மீட்கப்பட்ட பெண் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி அருகே உள்ள வெட்டுவால்மேடு கிராமத்தை சேர்ந்த பிச்சைமுத்து மகன் இளையராஜா (28). இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மலையாளப்பட்டி ஊராட்சி கவுண்டர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஜவ்வரிசி ஆலையில் வேலைக்கு சேர்ந்தாராம். அங்கு, சம்மந்தப்பட்ட ஆலை உரிமையாளர் குழந்தைவேல், அவரை கொத்தடிமையாக நடத்தினாராம். அளவுக்கு அதிகமான நேரம் பணிபுரிய வேண்டுமென கட்டாயப்படுத்தி வந்ததால், இளையராஜா தனது மனைவி செல்வியுடன் மில்லுக்கு அருகில் தங்கி வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் மில்லில் பணிபுரிய விருப்பமில்லாத இளையராஜா கடந்த 1 வாரத்திற்கு முன், மனைவி செல்வியை அழைத்துக்கொண்டு வெளியூருக்கு தப்பி ஓடிவிட்டாராம்.

அதைத்தொடர்ந்து ஜவ்வரிசி ஆலை உரிமையாளர் குழந்தைவேல், இளையராஜாவை அரும்பாவூர், பூலாம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தேடியும் கிடைக்காததால், இளையராஜாவின் தாய் மாரியாயியை (50),செவ்வாய்க்கிழமை (ஜூலை 15)   அழைத்துச்சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தகவலறிந்த அரும்பாவூர் போலீஸார் தனியார் ஜவ்வரிசி ஆலைக்குச் சென்று மாரியாயியை புதன்கிழமை மீட்டனர். மயங்கிய நிலையில் காணப்பட்ட மாரியாயி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, தனியார் ஜவ்வரிசி ஆலை நிர்வாகிகளிடம் அரும்பாவூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →