முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அயோத்தி ராமர் ரதம் நாளை முதல் ஆக. 2ஆம் தேதி வரை சுற்றுப்பயணம்

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அயோத்தி ராமர் ரதம் வியாழக்கிழமை (ஜூலை 17ஆம்தேதி) முதல் ஆக. 2ஆம்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறது என மாவட்ட பொதுச் செயலர் பெ. சக்திவேலன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டு அறிக்கை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:53 AM
பகிர்:

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அயோத்தி ராமர் ரதம் வியாழக்கிழமை (ஜூலை 17ஆம்தேதி) முதல் ஆக. 2ஆம்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறது என மாவட்ட பொதுச் செயலர் பெ. சக்திவேலன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டு அறிக்கை

இந்துகளிடம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அயோத்தி ராமர் ரதம் வியாழக்கிழமை (17ஆம்தேதி) முதல் ஆக. 2ஆம்தேதி வரை தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறது. வியாழக்கிழமை காலை 9மணிக்கு ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபரான் கோயில் முன்பிருந்து இந்த ரதமானது புறப்படுகிறது. அதில் மாநில இந்து முன்னணி தலைவர் டாக்டர் அரசுராஜா, மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த ரதமானது 18ஆம்தேதி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறது. 19 ஆம்தேதி ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியம் நாசரேத் நகரம், மூக்குப்பீறி, வாழையடி உள்ளிட்ட் பகுதியிலும், 20, 21ஆம்தேதிகளில் குரும்பூர், நாலுமாவடி உள்ளிட்ட பகுதியிலும், 22 முதல் 24ஆம்தேதி வரை உடன்குடி, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் கிராம பகுதியிலும், 25, 26ஆம்தேதி சாத்தான்குளம் ஒன்றியத்தியலும், 27ஆம்தேதி பேய்க்குளம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பகுதியிலும், 28, 29ஆம்தேதிகளில் கருங்குளம், செய்துங்கநல்லூர், முறப்பநாடு பகுதியிலும், 30, 31ஆம்தேதி ஏரல், வாழவல்லான், முக்காணி பகுதியிலும்,  ஆக. 1ஆம்தேதி ஆறுமுகனேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் பகுதியிலும், ஆக. 2ஆம்தேதி சாயர்புரம் பகுதியிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

Advertisement

இந்த ரதத்திற்கு இந்து முன்னணி சார்பில் அனைத்து பகுதியிலும் சிறப்பு பூஜை நடத்தி சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் அனைத்து இந்து முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments