முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே பெண் எரித்துக் கொலை செய்து புதைப்பு: கணவர் நீதிமன்றத்தில் சரண், மூவர் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காணாமல் போன பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு சிதம்பரம் புறவழிச்சாலையில் புதைக்கப்பட்ட விபரம் தற்போது தெரிய வந்துள்ளது. அப்பெண்ணின் கணவர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:54 AM
பகிர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காணாமல் போன பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு சிதம்பரம் புறவழிச்சாலையில் புதைக்கப்பட்ட விபரம் தற்போது தெரிய வந்துள்ளது. அப்பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மேலும் மாமியார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் அருகே ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பஞ்சநாதன் மகள் சீதா (31). இவரும், பெருமாத்தூரைச் சேர்ந்த சரவணன் (28) என்ற வாலிபரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டு தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். சீதா அதே பகுதியில் உள்ள சுத்திகரிக்கும் குடிநீர் விநியோகம் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 19-ம் தேதி வேலைக்கு சென்ற சீதா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சீதாவின் தந்தை பஞ்சநாதன் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.

விசாரணையில் சீதாவை கொலை செய்துவிட்டனர் என்ற விபரம் போலீஸாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கணவர் சரவணன் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஜூலை 15-ம் தேதி சரணடைந்தார். சரணடைந்த சரவணனை நீதிபதி கார்த்திகேயன் புவனகிரி போலீஸாரிடம் ஒப்படைத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சரவணனை கைது செய்த புவனகிரி போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கணவர் சரவணன், அவரது தாயார் செல்வி (55), சகோதரி சகுந்தலா (39), சகோதரியின் கணவர் வெங்கடேசன் (57) ஆகியோர் சேர்ந்து சீதாவை சிதம்பரம் அருகே சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கார்டனுக்கு அழைத்துச் சென்று கொலை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் அந்த உடலை அங்கேயே புதைத்தது தெரிய வந்துள்ளது.

பின்னர் புவனகிரி போலீஸார் சீதா காணாமல் போன வழக்கை, கொலை வழக்காக மாற்றி கணவர் சரவணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர். கணவர் சரவணனின் தாயார் செல்வி (55), சகோதரி சகுந்தலா (39), சகோதரியின் கணவர் வெங்கடேசன் (57) ஆகிய மூன்று பேரை புதன்கிழமை கைது செய்தனர். விரைவில் சிதம்பரம் புறவழிச்சாலையில் தீவைத்து எரிக்கப்பட்டு புதைக்கப்பட்ட சீதாவின் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்

சிதம்பரம் அருகே சீதா என்ற பெண் தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வியாழக்கிழமை காலை ஆதிவராகநத்தத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில்அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் புவனகிரி போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்ததை அடுத்த மறியலை வாபல் பெற்றனர். இதனால் புவனகிரி- சேத்தியாத்தோப்பு சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.