கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது
கிருஷ்ணகிரியில் அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவியை குடிபோதையில் இருந்த 4 இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கிருஷ்ணகிரியில் அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவியை குடிபோதையில் இருந்த 4 இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கிருஷ்ணகிரி அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் தன் காதலனுடன் ராயக்கோட்டை அருகே உள்ள மலைப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு குடிபோதையில் இருந்த 4 இளைஞர்கள் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் டிரைவர்கள் என தெரிய வந்துள்ளது.