அண்ணாமலைப் பல்கலையில் பிஇ முதலாண்டு வகுப்புகள் ஆக.1 முதல் தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் 2014-15 கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு பிஇ, பி.ஃபார்ம் வகுப்புகள் ஆகஸ்டு 1 முதல் தொடங்கப்படுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் 2014-15 கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு பிஇ, பி.ஃபார்ம் வகுப்புகள் ஆகஸ்டு 1 முதல் தொடங்கப்படுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள கலைஅரங்கத்தில் ஆகஸ்டு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடக்கவிழா நடைபெறுகிறது. பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழக அரசு முதன்மைச் செயலருமான ஷ்விதாஸ்மீனா முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்கி வைத்துப் பேசுகிறார். விழாவிற்கு பதிவாளர் என்.பஞ்சநதம் தலைமை வகிக்கிறார். பொறியியல் புல முதல்வர் முனைவர் செ.வேலுசாமி வரவேற்கிறார். பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ்ஆலிவர் பொன்ராஜ், டி.கிருஸ்துராஜ் ஆகியோர் வாழ்த்துரையாற்றுகின்றனர்.