விருதுநகர் கல்பள்ளிவாசல் இப்தார் விருந்து எம்.எல்.ஏ பங்கேற்றார்
விருதுநகர் கல்பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகம் சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்
விருதுநகர் கல்பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகம் சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் திங்கள்கிழமை கலந்து கொண்டனர்.
விருதுநகர் கல் பள்ளிவாசல் ஜமாத்தின் செயலாளர் ஜாபரூல்லா தலைமை வகித்தார். பெரியபள்ளிவாசல் ஜமாத் தலைவர் எகியாகான் முன்னிலை வகித்தார். இந்த மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் பங்கேற்று பண்டிகை தின வாழ்த்துக்களை தெரிவி்த்துக் கொண்டார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி, நகராட்சி தலைவர் மா.சாந்தி, அதிமுக நகர செயலாளர் முகமது நயினார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் முஸ்லீம் ஜாமத்தை சேர்ந்தவர்கள் இப்தார் விருந்து அளித்து சிறப்பித்தனர்.
Advertisement