தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு: விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வலியுறுத்தல்

நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை விரைவாக நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்டா பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெ. விஜயபாஸ்கர்

மேட்டூர் அணையின் மூலம் திறந்து விடப்படும் தண்ணீரை முடிந்த அளவு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை விரைவாக நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்டா பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உழவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாருக்கு அனுப்பிய மனு விவரம்: 

காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் தற்போது உள்ள சூழ்நிலையில் சாகுபடிக்கு பயன்படுத்தப்படாமல் வீணாகும் வாய்ப்பே உள்ளது. எனவே, மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் டெல்டா பாசன பகுதி விவசாயிகள் மத்தியில் உரிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். தண்ணீரை முடிந்த அளவுக்கு பயன்படுத்தி உழவு மற்றும் நடவு பணிகளை உடனடியாக தொடங்குமாறு வேளாண் அலுவலர்கள் வழிகாட்ட வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT