ஜெயங்கொண்டம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
ஜெயங்கொண்டம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் பலியானான். மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் பலியானான். மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே சூரியமணல் கிராமத்தில் உள்ள சந்திரா ஏரி என்ற இடத்தில் பாலகிருஷ்ணன் என்பவர், தன் லாரியை கழுவிக் கொண்டிருந்தார். அவரின் குழந்தைகள் மற்றும் அவரது தம்பியின் குழந்தைகள் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். பாலகிருஷ்ணன் தனது வேலையில் கவனமாக இருந்தபோது, சிறுவர்கள் குளத்தில் இறங்கியுள்ளனர். இதில், புகழேந்தி மகன் தமிழ்ச்செல்வன் (7) என்ற 2ம் வகுப்பு மாணவன் பலியானான். இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தான்.
மேலும் புகழேந்தியின் மகன் தீபக்ராஜ் (5), பாலகிருஷ்ணன் மகள் பிரியதர்ஷினி (8), மகன் ரகுராம் (6) ஆகிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.