முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவையில் 22 இந்து இயக்கத் தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு

கோவை காவல் துறைக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு இன்று காலை 10 மணிக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். கோவை பகுதியில் 7 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெடிக்கும் என்றும் கூறியிருந்தார். இதை அடுத்து போலீஸார்  2 தனிப்படை அமைத்து மர்ம நபர் குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் தேடுதல் வேட்டையிலும் இறங்கினர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:01 AM
பகிர்:

கோவை காவல் துறைக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு இன்று காலை 10 மணிக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். கோவை பகுதியில் 7 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெடிக்கும் என்றும் கூறியிருந்தார். இதை அடுத்து போலீஸார்  2 தனிப்படை அமைத்து மர்ம நபர் குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் தேடுதல் வேட்டையிலும் இறங்கினர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் சிவானந்தபுரம் கீர்த்திகா பேக்கரி என்பதில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் மூலம் பேசும் பொதுத் தொலைபேசி மூலம் இந்த மிரட்டல் தகவல் வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதை அடுத்து சரவணம்பட்டி போலீஸ் தீவிர விசாரணையில் இறங்கினர்.

மேலும், மிரட்டல் தொடர்பாக, 22 இந்து இயக்கத் தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. ஏற்கெனவே, இரு தினங்களுக்கு முன்னர் அனுமன் சேனா அமைப்பின் நிர்வாகி வீட்டின் முன்னர் அரிவாளுடன் மர்ம நபர்கள் இரண்டு பேர் நின்றிருந்ததைப் பார்த்து, இது குறித்து புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து பாதுகாப்பு மேலும் தீவிரப் படுத்தப் பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →