கோவை நகருக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தேடுதல் வேட்டை
கோவை மாநகரில் ஐந்தாறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று கோவை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் தகவலை அடுத்து, போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மேலும்,
கோவை மாநகரில் ஐந்தாறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று கோவை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் தகவலை அடுத்து, போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மேலும், இந்து அமைப்பு பிரமுகர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
கோவை கணபதி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கோவை கணபதியில் இருந்து மர்ம நபர் தொலைபேசியில் பேசியதால், கணபதியில் தனிப்படை போலீஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.