முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்காலில் 7 பெருமாள்கள் கருட சேவை: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பஞ்சமி நாளான வியாழக்கிழமை காரைக்காலில் 7 பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளுச் செய்யும்  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக  காலையிலேயே காரைக்கால் மாவட்டத்தில் உள்ள

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:01 AM
பகிர்:

ஆடி மாத பஞ்சமியையொட்டி 7 பெருமாள் கோயில்களில் இருந்து சுவாமிகள் காரைக்காலில் ஸப்த (ஏழு) கருட சேவையாக காட்சியளித்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

பஞ்சமி நாளான வியாழக்கிழமை காரைக்காலில் 7 பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளுச் செய்யும்  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக  காலையிலேயே காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருமலைராயன்பட்டினம்

ஸ்ரீ ரகுநாதப் பெருமாள், ஸ்ரீ வீழிவரதராஜப் பெருமாள், நிரவி ஸ்ரீ கரியமாணிக்கப்பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், தென்னங்குடி ஸ்ரீ வரதராஜப்பெருமாள், காரைக்கால் கோவில்பத்து ஸ்ரீ கோதண்டராமப் பெருமாள் ஆகிய 6 பெருமாள் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலுக்கு பல்லக்கில் வந்தன.

காரைக்கால் வந்த பெருமாள்களை ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் சார்பில் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் உள்ளிட்ட 7 பெருமாள்களுக்கும் சிறப்புத் திருமஞ்சனம் (அபிஷேகம்), நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் வரிசைப்படுத்தி நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் எல்லா பெருமாள்களும், காரைக்கால் அம்மையார் குளக்கரையில் ஒருசேர எழுந்தருளியது.  வரிசையாக அமர்த்தப்பட்டு கருடனில் சேவை சாதித்த பெருமாள்களை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று வழிபாடு நடத்தினர். காரைக்கால் கருட சேவைத் திருவிழாவைக்காண பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். இரவு கருடனில் வீற்றிருந்தவாறு பெருமாள்கள் வீதியுலா நடைபெற்றது.

பஞ்சமியன்று கருட சேவையில் பெருமாளை தரிசிப்பதன் மூலம் பல்வேறு தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை அகன்று வாழ்க்கையில் சுகம் ஏற்படுமென்பது பக்தர்களின் நம்பிக்கை. நிகழ்ச்சியை நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஆர்.மாணிக்கவாசகம், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினர், அனைத்து பெருமாள் கோயில்களின் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →