நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: 4.95 லட்சம் மாணவர்களுக்கு புத்தகம் அளிப்பு
கோடை விடுமுறை முடிந்து திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 4.95 லட்சம்
கோடை விடுமுறை முடிந்து திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 4.95 லட்சம் மாணவர், மாணவிகளுக்கு புத்தகம், நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவர், மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். தனியார் பள்ளிகளில் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் தங்குவதற்கு தேவையான பொருட்களுடன் பள்ளிக்கு வந்தனர்.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகம், நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் திருநெல்வேலி மாவட்டத்தில் 4.95 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் 761 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், 1158 அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. தொடக்க, நடுநிலைப் பிரிவில் பயிலும் 2.26 லட்சம் மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது.இதேபோல் இம்மாவட்டத்தில் 56 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 24 முழுமையாக அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளும், 34 பகுதி அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன. ஒரு முனிசிபல் உயர்நிலைப் பள்ளி, 3 ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளிகள், 2 சிறப்பு உயர்நிலைப் பள்ளிகள், 12 முழு சுயநிதி உயர்நிலைப் பள்ளிகள் உள்பட 132 பள்ளிகள் உள்ளன.
மேலும் 88 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 5 முனிசிபல் மேல்நிலைப் பள்ளிகள், 4 ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகள், 53 முழுமையாக அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 36 பகுதி அரசு உதவிபெறும் பள்ளிகள், ஒரு சிறப்பு பள்ளி, 8 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 198 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. யர்நிலை, மேல்நிலைப் பிரிவுகளில் பயிலும் 2.69 லட்சம் மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.