நெல்லை: மாம்பழக் கிட்டங்கிகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
திருநெல்வேலி சந்திப்பில் மாழ்பழக் கிட்டங்களில் செவ்வாய்க்கிழமை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அபபோது பெட்ரோலிய மெழுகு பூசி விற்பனை செய்த 20 கிலோ ஆப்பிள்
திருநெல்வேலி சந்திப்பில் மாழ்பழக் கிட்டங்களில் செவ்வாய்க்கிழமை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அபபோது பெட்ரோலிய மெழுகு பூசி விற்பனை செய்த 20 கிலோ ஆப்பிள் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலிக்கு மாம்பழம், ஆப்பிள் போன்ற பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பழ வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பில் பழக்கடைகளில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ஆர். கருணாகரன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏ.ஆர். சங்கரலிங்கம், பி. காளிமுத்து, எம். கனியனான்டி, எஸ். இபுராஹீம், ரமேஷ், குமாரசாமி, நாகராஜன், அன்பழகன் உள்ளிட்டோர் 4 குழுக்களாக சந்திப்பு கண்ணம்மன் கோயில் தெரு, பெருமாள் வடக்கு ரதவீதியில் மாம்பழக் கிட்டங்கிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் அனுமதிக்கப்பட்ட எத்தலின் திரவம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட பெட்ரோலிய மெழுகு பூசிய ஆப்பிள் பழங்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 20 கிலோ ஆப்பிள் பழங்கள், 25 கிலோ அழுகிய மாம்பழங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.