முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் வணிகவரித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வணிக வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். 15 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வினை முறையாக வழங்க வேண்டும் என்பன

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

வணிக வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். 15 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வினை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வணிகவரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். துணை வணிக வரி அலுவலர் பணியிடங்கள் குறித்து உண்மை நிலையை உச்சநீதிமன்றத்தில் அரசு தெரிவிக்க வேண்டும். பணியாளர்கள், அலுவலர்கள் மீது விரோதப் போக்கை கடைபிடிக்கும் இணை ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிக வரித் துறையில் துணை வணிக வரி அலுவலர் பணியிடத்தை நேரடியாக நிரப்புவதை அரசு கைவிட வேண்டும். 15 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் பணி செய்யும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி துணை வணிகவரி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி்க்கைகளை வலியுறுத்தி வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் வணிகவரி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு உதவி ஆணையர், வணிக வரி அலுவலர், துணை வணிகவரி அலுவலர்கள் சங்கத்தின் கோட்டப் பொறுப்பாளர் யோவான்செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் எல். ஜூடுபிரகாஷ் முன்னிலை வகித்தார்.

வணிகவரித்துறை பணியாளர்கள் மாநில துணைத் தலைவர் அ. முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். உதவி ஆணையர், வணிகவரி அலுவலர், துணை வணிகவரி அலுவலர்கள் சங்கக் கோட்டத் தலைவர் சுரேஷ்ஜெயராஜ், மாவட்ட பொருளாளர் நாகவல்லி உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →