முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூரில் பட்டப்பகலில் 70 பவுன் நகை திருட்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தென்றல் நகரில் நடராஜ் என்பவர் வீட்டில் 70 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தென்றல் நகரில் நடராஜ் என்பவர் வீட்டில் 70 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூரில் உள்ள பத்திரப் பதிவு அலுவகத்தில் பத்திரப் பதிவுக்காக வீட்டில் உள்ளோர் சென்றுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் இன்று பகல் 1.30க்கு வந்து, வீட்டின் கதவை உடைத்து திருடியுள்ளனர். வீட்டிலுள்ளோர் திரும்பி வந்து பார்த்தபோது திருடு போனது தெரியவந்தது. இதில் 70 பவுன் நகைகள், ஏடிம் கார்டு 4, வங்கி பாஸ்புக் ஆகியவை திருடு போனதாக நடராஜ் கூறியுள்ளார்.

இதை அடுத்து சாத்தூர் நகர போலீஸார், கைரேகை நிபுணர்கள் அங்கே சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments