மயிலாடுதுறை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் ரொக்கம்,11 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது வெள்ளிக்கிழமை அதிகாலை தெரியவந்தது.
மயிலாடுதுறை வட்டம்,சேந்தங்குடி அபிராமி நகரைச் சேர்நதவர் சீ.அய்யப்பன்(57). இவர் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார்.
இவர் தனது மகன் ராகுல் என்பவரை கல்லூரியில் சேர்ப்பதற்க்காக தனது மனைவி மகன் ஆகியோருடன் வியாழக்கிழமை சென்னைக்கு சென்றுவிட்டார்.வீ்ட்டில் யாரும் இல்லை.
வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய அய்யப்பன் வீட்டினுள சென்று பார்த்தபோது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்த்து கண்டு அதிர்ச்சியுற்றார். பின்னர் மற்றொரு அறையில் வைத்திருந்த பீரோ,லாக்கர் பெட்டியையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் ரொக்கம்,11 பவுன் நகைகளும் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸாருக்கு அய்யப்பன் தகவல் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து உதவி காவல் சந்தோஷ் ஹதிமணி மற்றும் போலீஸார் திருடு சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர் திருட்டு: கடந்த 2013-ம் வருடம் ஜனவரி மாதத்தில் அய்யப்பன் வீட்டிந் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகைகள் கொள்ள போனது.தற்போதும் குறிவைத்து அவர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தேறியுள்ளதால் அய்யப்பன் குடும்பனத்தினர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.