முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒரே நாளில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்தது

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2.50 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 7.21 அடியும் உயர்ந்துள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2.50 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 7.21 அடியும் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 6 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 7 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 4.5 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 21 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 25 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருவதால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1765.05 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 31.64 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 41.13 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 12 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 20 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது: நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2.50 அடி உயர்ந்து 53.75 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 7.21 அடி உயர்ந்து 72.83 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 64.39 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணையில் இருந்து குடிநீருக்காக 204.75 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் பெருங்கால் பாசனத்துக்கு 75 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி: இதேபோல் கடனாநதி அணையின் நீர்மட்டம் 51.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 63.50 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 53.50 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 46.63 அடியாகவும் இருந்தது.

தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து நீடிக்காத காரணத்தால் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலையில் தற்போது அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். எனவே அணைகளில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →