தற்போதைய செய்திகள்

காதல் ஜோடி தலைமறைவால் பெண்ணின் தந்தை தற்கொலை : பாமகவினர் வாக்குவாதம்

ஆம்பூர் அருகே இரு சமுதாயத்தைச் சேர்ந்த காதல் ஜோடி தலைமறைவானதால் மனமுடைந்த பெண்ணின் தந்தை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில்

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே இரு சமுதாயத்தைச் சேர்ந்த காதல் ஜோடி தலைமறைவானதால் மனமுடைந்த பெண்ணின் தந்தை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண்ணை உறவினர்களிடம் காண்பித்து விட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கூறி பாமகவினர் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர்.

பட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், முன்னாள் எம்எல்ஏக்கள் இளவழகன், டி.கே. ராஜா உள்ளிட்டோர், காதலனுடன் சென்ற பெண்ணை, தாய் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் காட்டிவிட்டு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம்பூர் பொது மருத்துவமனையில், பெண்ணை உறவினர்களிடம் காண்பிக்கும் வரை உயிரிழந்த தந்தையின் உடலை  வாங்க மாட்டோம் என்ற அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு ஏராளமான காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை உயர் அதிகாரிகள் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT