அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
அறந்தாங்கி அருகேயுள்ள சீனமங்கலம் கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்துறைக்கு வந்த தகவலையடுத்து அறந்தாங்கி வட்டாட்சியர் வீ.கதிரேசன் சனிக்கிழமை காலை வாகனச்சோதனையில்
அறந்தாங்கி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
அறந்தாங்கி அருகேயுள்ள சீனமங்கலம் கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்துறைக்கு வந்த தகவலையடுத்து அறந்தாங்கி வட்டாட்சியர் வீ.கதிரேசன் சனிக்கிழமை காலை வாகனச்சோதனையில் ஈடுபட்டார் அப்போது மணல் ஏற்றிவந்த டிராக்டரை நிறுத்தி விசாரித்தபோது அனுமதியின்றி மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. உடனே டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்து நாகுடி காவல்நிலையத்தில் ஓப்படைவு செய்யப்பட்டது.
மேலும் இது குறித்து மேல்நடவடிக்கை எடுக்க அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறந்தாங்கி வட்டாட்சியர் வீ.கதிரேசன் தெரிவித்துள்ளார்.