முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆட்டோ மீது கார் மோதல்: 3 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை வட்டம் ஆசனூரைச் சேர்ந்தவர் காதர்பீ(70), அவரது மகள் நூர்னிசா(40), நூர்னிசா மகன் நிபான்(8)ஆகிய மூவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுவிட்டு ஒரு

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

உளுந்தூர்பேட்டை வட்டம் ஆசனூர் அருகே சனிக்கிழமை ஆட்டோ மீது கார் மோதியதில் தாய், மகள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை வட்டம் ஆசனூரைச் சேர்ந்தவர் காதர்பீ(70), அவரது மகள் நூர்னிசா(40), நூர்னிசா மகன் நிபான்(8)ஆகிய மூவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுவிட்டு ஒரு ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். செல்லும் வழியில் ஆசனூர் வளைவில் ஆட்டோ நின்றுகொண்டிருக்கும்பொழுது சென்னையிலிருந்து, திருச்சி நோக்கிச்சென்ற கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த காதர்பீ, நூர்னிசா, நிபான் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மூவரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் எடைக்கல் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →