தற்போதைய செய்திகள்

நில அடமான பிரச்னை:ரூ.10 லட்சத்துடன் தப்பி ஓடியவர் கைது

நெய்வேலி 13-வது வட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தராயர்(53). என்எல்சி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை பண்ருட்டி சாத்திப்பட்டு நெல்லித்தோப்பை சேர்ந்த ரவிச்சந்திரன்(34) என்பவரிடம் அடமானம்

பெ. விஜயபாஸ்கர்

நில அடமான பிரச்னையில் ரூ. 10 லட்சத்துடன் தப்பி ஓடியவரை போலீஸார் கைது செய்தனர்.

நெய்வேலி 13-வது வட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தராயர்(53). என்எல்சி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை பண்ருட்டி சாத்திப்பட்டு நெல்லித்தோப்பை சேர்ந்த ரவிச்சந்திரன்(34) என்பவரிடம் அடமானம் வைத்து ரூ. 4.5 லட்சம் கடன் பெற்றிருந்தார். அந்த தொகை நாளடைவில் அசலும் வட்டியுமாக ரூ. 19 லட்சமாக அதிகரித்தது.

இதுகுறித்து இருதரப்பினரும் ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் சமரசம் பேசியதில் ஆனந்தராயர் ரூ.10 லட்சம் கொடுத்தால் அடமானம் வைத்த நிலத்தை திருப்பிதர ரவிச்சந்திரன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.  அதன்படி வெள்ளிக்கிழமை காலை வடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து ரவிச்சந்திரனிடம் ரூ. 10 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ரவிச்சந்திரன் பத்திரபதிவு அலுவலகத்தி கையெழுத்து போட்டு அடமானம் வைக்கப்பட்ட நிலத்தை மாற்றிதராமல் ரூ. 10 லடசத்துடன் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச்சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தராயர் தரப்பினர் வடலூர் போலீஸில் புகார் செய்தனர். இந்நிலையில் குறிஞ்சிப்பாடி அண்ணாநகர் அருகே காரில் சென்ற ரவிச்சந்திரனை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT