முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்குப் பதிவு

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி(40). இவரது மனைவி வசந்தி (30). கூலித் தொழிலாளியான சின்னதம்பி, சனிக்கிழமை பணிக்கு செல்லவில்லையாம்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே மனைவியைத் தாக்கிய கணவன் மீது போலீஸôர் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி(40). இவரது மனைவி வசந்தி (30). கூலித் தொழிலாளியான சின்னதம்பி, சனிக்கிழமை பணிக்கு செல்லவில்லையாம். இதுகுறித்து மனைவி வசந்தி, கணவன் சின்னதம்பியிடம் கேட்டாராம். இதனால் தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டத்தில் ஆத்திரமடைந்த சின்னதம்பி, வசந்தியைத் தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த வசந்தியை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வசந்தி அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →