முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒரகடம் அருகே குழந்தைகளுடன் பெண் மாயம்

ஒரகடம் அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி கவிதா(32). ஒரகடம் பகுதியில் உள்ல தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.  இவர்களுக்கு நிதீஷ்குமார்(9)

Updated On : 1 மார்ச், 2014 at 6:21 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:02 AM

ஒரகடம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு ஆண்குழந்தைளுடன் பெண் மாயமானதால் அவரது உறவினர்கள் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒரகடம் அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி கவிதா(32). ஒரகடம் பகுதியில் உள்ல தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.  இவர்களுக்கு நிதீஷ்குமார்(9), சாந்தகுமார்(3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் விஜயகுமார் தினமும் மது அருந்திவிட்டு  கவிதாவிடம்  அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கவிதா தனகு குழந்தைகள் நிதீஷ்குமார், சாந்தகுமார் ஆகியோர் அழைத்துக்கொண்டு கடந்த 27ம் தேதி முதல் மாயமானார். அவர்களை எங்கு தேடியும் கிடைக்காததால் கவிதாவின் தாயார் வல்லம் கிராமத்தை சேர்ந்த சாந்தி ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் ஒரகடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாயமான கவிதா மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.