முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை

தூத்துக்குடியில் 37 வது வார்டு கவுன்சிலரும் அதிமுக மேற்கு மண்டலத் தலைவருமான வெள்ளப்பாண்டி (வயது 55) இன்று மதியம் அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இரு சக்கர வாகனத்தில்  வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

தூத்துக்குடியில் 37 வது வார்டு கவுன்சிலரும் அதிமுக மேற்கு மண்டலத் தலைவருமான வெள்ளப்பாண்டி (வயது 55) இன்று மதியம் அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இரு சக்கர வாகனத்தில்  வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த வெள்ளப்பாண்டி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியில் உயிரிழந்தார். இதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனையில் திரண்டு வந்து, வெள்ளப்பாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கொல்லப்பட்ட வெள்ளப்பாண்டிக்கு மனைவி, மற்றும் 5 மகள்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.