முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது

மதுரை விமானநிலையத்தில் இலங்கையிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை கைபற்றி இலங்கை பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

மதுரை விமானநிலையத்தில் இலங்கையிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை கைபற்றி இலங்கை பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மதுரை விமானநிலையத்திற்கு புதன்கிழமை இலங்கையிலிருந்து தனியார்விமானம் ஒன்று வந்தது.பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைசெய்தனர்.

சோதனையில் இலங்கையை சேர்ந்த முகமதுமுதின்(32)இவர் தனது ஆசனவாயில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 159 கிராம் எடை கொண்ட தங்ககட்டியை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதையடுத்து தங்கத்தை கைபற்றி முகமதுமுதினை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.