"அதிமுக தலைமையிலான அரசு மத்தியில் அமையும்போது..." : என்னவெல்லாம் நடக்கும் என அடுக்கினார் முதல்வர் ஜெயலலிதா
நாகப்பட்டினம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் கே.கோபாலை ஆதரித்து ஜெயலலிதா இன்று பிரசாரம் மேற்கொண்டார். நாகை அவுரி திடலில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது...
நாகப்பட்டினம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் கே.கோபாலை ஆதரித்து ஜெயலலிதா இன்று பிரசாரம் மேற்கொண்டார். நாகை அவுரி திடலில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது...
இந்த ஆட்சி மாற்றம் என்பது, வெறும் தேர்தலுக்கானது மட்டுமல்ல; அண்டை நாடுகள் வெளிநாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றும் ஆட்சி மாற்றம் இது.
அதிமுக தலைமையிலான அரசு மத்தியில் அமையும் போது கச்சத்தீவு மீட்கப் படும்; இனப்படுகொலை செய்த இலங்கை அரசு ஐ.நா.சபையின் முன்னர் நிறுத்தப்படும்; முப்படைகள் நவீனப் படுத்தப் படும்,
மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்; மரபணு மாற்ற விதைகளை களப் பரிசோதனைக்காகக்கூட தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்;
அதிமுக தலைமையிலான அரசு மத்தியில் அமையும்போது மரபணு மாற்ற விதைகளுக்கான அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும்.
பெட்ரோலிய நிறுவனங்களே பெட்ரோலியப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்து கொள்ளும் உரிமை ரத்து செய்யப்படும்;
இந்த அரசுக்கு முற்றுப் புள்ளி வைக்கணும்; காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு துரும்பைக்கூட கருணாநிதி கிள்ளிப் போடவில்லை.
வாழ வைக்கும் இனம் தமிழினம்; வாழ வைத்த இனத்தை வஞ்சித்தது காங்கிரஸ் அரசு; இந்த துரோகத்துக்கு இந்தத் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.
மீத்தேன் வாயு எடுப்பது தொடர்பாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை ரத்து செய்வோம். அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் போது, இது எல்லாம் நடக்கும் என்று பேசினார் ஜெயலலிதா.
இந்தப் பகுதியில் அவர் பேசிய பொதுக்கூட்டங்களில் எல்லாம், அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும்போது என்றோ, அதிமுக அங்கம் வகிக்கும் அரசு என்றோ குறிப்பிட்டுத்தான் பேசினார்.