தருமபுரி மாவட்டத்தில் 100 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உரிமம் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என
தருமபுரி மாவட்டத்தில் மக்களவை தேர்தலை ஒட்டி உரிமம் பெற்று வைத்திருந்த 100 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உரிமம் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் உரிமம் 428 துப்பாக்கிகள் உரிமம் பெறப்பட்டுள்ளது. இதில் கடந்த இரு நாள்களில் மட்டும் சுமார் 100 துப்பாக்கிகளை அதனுடய உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள துப்பாக்கிகள் ஒப்படைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.