முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏமாற்றுபவர்களை அடையாளம் காட்டும் தேர்தல்: கே.ஏ.செங்கோட்டையன்

இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர், விடுதலைப்புலிகளுக்காக குரல் கொடுத்தவரும் அல்ல, இலங்கை தமிழர்களுக்காக கண்ணீர் சிந்தியவரும் அல்ல, இவர்களெல்லாம் ஏன் நாடாளுமன்ற உறுப்பினராக்கி பணியாற்ற

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர், விடுதலைப்புலிகளுக்காக குரல் கொடுத்தவரும் அல்ல, இலங்கை தமிழர்களுக்காக கண்ணீர் சிந்தியவரும் அல்ல, இவர்களெல்லாம் ஏன் நாடாளுமன்ற உறுப்பினராக்கி பணியாற்ற வேண்டும் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கி எரிவேன் என்று கூற துணிவு இல்லை. நாட்டு மக்களையும், நாட்டையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களை அடையாளம் காட்ட வேண்டிய தேர்தல் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சிதம்பரம் தெற்கு ரத வீதி ஏ.ஆர்.மஹாலில் பிப்.11-ம் தேதி சிதம்பரம் நகருக்கு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் வரவேற்றார். கூட்டத்தில் அதிமுக தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

Advertisement

அவர் பேசியது: கடலூர் மாவட்டம் என்றைக்கும் அதிமுகவின் எஃகு கோட்டையாகும். சிதம்பரம் தில்லை நடராஜர் வீற்றிருக்கும் இடம். தில்லை என்பதை சிதம்பரம் ரகசியம் என்று சொல்லுவார்கள். இந்த நாடாளுமன்ற தேர்தல் ஒரு ரசகியத்தை உடைக்கப்போகிற தேர்தலாக அமையப் போகிறது.

1977-க்கு பிறகு இத்தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டைஇலையை பார்த்ததில்லை. புதிய ரத்தம் ஓட்டத்தை ஜெயலலிதா உங்களுக்கு தந்துள்ளார். வெற்றி வாகை சூடித்தருவது உங்கள் கையில்தான் உள்ளது. சிதம்பரம் பகுதி ஆன்மீகவாதியும், கல்வியாளர்களும் நிறைந்து வாழும் பகுதியாக திகழ்கிறது. குறிப்பிட்டு காட்டுவதற்கு காரணம், ஒருபுறம் ஆன்மீகத்தை, ஆலயத்தை நம்பி வாழுகின்றன தீட்சிதர்கள் இங்கு வெற்றி வாகை சூடியுள்ளார்கள். மறுபுறம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 12,500 பேர் தங்கள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறது என கண்ணீர் மல்க உண்ணாவிரதம் மேற்கொண்ட போது, அவர்களது கண்ணீர் துடைக்க நான் இருக்கிறேன் எனக் கூறிவர் முதல்வர் ஜெயலலிதா என்பதை மறந்துவிடக்கூடாது. கல்விக் கண்ணையும் திறக்கிறார். ஆன்மீகவாதிகளின் துயரங்களையும் துடைக்கிற இடம்தான் இந்த இடம். சந்திரகாசி வெற்றி உங்கள் கையில்தான் இருக்கிறது என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments