தற்போதைய செய்திகள்

கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம்

கடந்த 2012-ல் தேவர் ஜயந்தியின் போது விரகனூர் சுற்றுச்சாலை பகுதியில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான

ஜெயப்பாண்டி

மதுரையில் கடந்த டிசம்பரில் நடந்த கொலை வழக்கில் கைதானவர்களில் 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ல் தேவர் ஜயந்தியின் போது விரகனூர் சுற்றுச்சாலை பகுதியில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கில் கைதான பாட்டம் முத்துவிஜயன் உள்ளிட்டோர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு திரும்பிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மர்மக்கும்பலால் தாக்கப்பட்டனர்.

பெட்ரோல் குண்டு வீசியும், வெட்டியும் நடந்த தாக்குதலில் முத்துவிஜயன் கொல்லப்பட்டார். தனிப்பட்ட முன்விரோதத்தை முன்வைத்து நடந்த இந்த கொலை வழக்கில் 25 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிந்து 9 பேரைக் கைது செய்தனர். 15 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் டயனோகுமரன், முத்துகுமரன், பொண்ணுமணி, ஆனந்த் ஆகியோர் மீது தற்போது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT