தற்போதைய செய்திகள்

மக்களவைத் தேர்தலையொட்டி தேசத் தலைவர்களின் சிலைகள் மறைப்பால் சர்ச்சை

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படும் நிலையில் நாமக்கல்லில் தேசத் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டிருப்பது மக்கள்

தமிழ்ச்செல்வன்

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படும் நிலையில் நாமக்கல்லில் தேசத் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு மறைக்கப்பட்ட தேசத் தலைவர்களின் சிலைகளை உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் உள்ள பேனர்கள், போஸ்டர்கள் அழிக்கப்பட்டும், அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, மாவட்டம் முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர் சிலைகள் சனிக்கிழமை துணியால் கட்டி மறைக்கப்பட்டு வருகிறது. இதில், அண்ணா, எம்ஜிஆர் போன்ற அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மட்டுமின்றி பெரியார், காமராஜர், நேரு போன்ற தேசத் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள நேரு பூங்காவில் வைக்கப்பட்டுள்ள காமராஜர், நேரு சிலைகளும், பெரியார் சிலையும், பரமத்திவேலூர் பகுதியில் காமராஜர் சிலையும் துணிகளால் கட்டி மறைக்கப்பட்டிருப்பது மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், காந்தி, நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலைகள் மறைக்கப்படவில்லை.

அண்மையில் நடைபெற்ற ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலின்போது முதலில் மறைக்கப்பட்ட பெரியார், நேரு, காமராஜர் போன்ற தேசத் தலைவர்களின் சிலைகள் பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரின் உத்தரவை அடுத்து மீண்டும் திறக்கப்பட்டது. இதேபோல், நாமக்கல்லிலும் மறைக்கப்பட்டுள்ள தேசத் தலைவர்களின் சிலைகளை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி கூறுகையில், அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை மட்டுமே மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை துணியால் மூடி மறைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறுதலாக மறைக்கப்பட்டுள்ள தேசத் தலைவர்களின் சிலைகளை திறக்க அறிவுறுத்தப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT