தருமபுரி மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.4.48 லட்சம் பறிமுதல்
மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ளது. இதனால், ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி யாரும் பணத்தை எடுத்துச்
தருமபுரி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.4.48 லட்சத்தை தேர்தல் அலுலவர்கள் பறிமுதல் செய்தனர்.
மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ளது. இதனால், ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி யாரும் பணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என மாவட்ட தேர்தல் அலுவலர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.இதையடுத்து, தருமபுரி மாவட்டம் முழுவதும் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில், பென்னாகரத்தில் வட்டாட்சியர்கள் கனகராஜ், ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காரில் வந்த ஸ்ரீராமுலு என்பவர் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.ஒரு லட்சம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல, பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாகனச் சோதனையில் ரூ.2.48 லட்சமும், அரூர் பகுதியில் ரூ.ஒரு லட்சமும் உரிய ஆவணங்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.