வித்தியாசமான முறையில் துண்டுபிரசுரம் வெளியிட்டு அதிமுக பிரமுகர் தேர்தல் பிரசாரம்
சிதம்பரம் அருகே புவனகிரியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான ஜெயபாலன் என்பவர் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து புகைப்படங்களுடன் துண்டுபிரசுரங்கள் பிரசுரித்து
சிதம்பரம் அருகே புவனகிரியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான ஜெயபாலன் என்பவர் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து புகைப்படங்களுடன் துண்டுபிரசுரங்கள் பிரசுரித்து விநியோகம் செய்து அதிமுகவிற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.
ஒரு துண்டுபிரசுரத்தில் மறக்காதீர், மன்னிக்காதீர் என்ற தலைப்பில், மன்மோகன்சிங், சோனியாகாந்தி, இலங்கை அதிபர் ராஜபட்சேவிற்கு வைத்த விருந்து படத்தை பிரசுரித்துள்ளார். மேலும் இவர்களுக்கும், இவர்களுக்கு துணை நின்ற கருணாநிதி கும்பலுக்கு பாடம் புகட்ட வாக்களிப்பீர் என பிரசுரித்துள்ளார்.
மற்றொரு துண்டு பிரசுரத்தில் 1987 ஜூலை 30-ம் தேதி இலங்கையில், ராஜீவ்காந்தியை துப்பாக்கி கட்டையால், சிங்களராணுவ வீரர் தாக்கிய படத்தினையும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் 7 பேரை தமிழக அமைச்சரவை முடிவு செய்யப்பட்டடது குறித்தும் வெளியிட்டுள்ளார். அதில் ராஜீவ்காந்தியை கொலை செய்ய துணிந்தவர் இலங்கையில் சுதந்திர பறவை. ஆனால் இங்கு செய்யாத குற்றத்திற்கு தூக்குத்தண்டனை, 23 வருட சிறை. இதுதான் இந்தியாவின் இறையாண்மையா? இதுதான் தேசத்தின் விவகாரமா?, இதுதான் நீதியா? என பிரசுரித்துள்ளார்.