முகப்பு
நாமக்கல்

176 மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி

தோ்தல் பணியில் ஈடுபடும் 176 மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 மார்ச், 2026 at 11:23 PM
தோ்தல் பணியில் ஈடுபடும் 176 மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பகிர்:

தோ்தல் பணியில் ஈடுபடும் 176 மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி) தொகுதியில் 285 வாக்குச்சாவடிகள், சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியில் 304 வாக்குச்சாவடிகள், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச்சாவடிகள், பரமத்தி வேலூா் தொகுதியில் 254 வாக்குச்சாவடிகள், திருச்செங்கோடு தொகுதியில் 289 வாக்குச்சாவடிகள் மற்றும் குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1780 வாக்குச்சாவடிகள் உள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு 6 தொகுதிகளிலும் 176 மண்டல அலுவலா்கள், 176 மண்டல துணை அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுகின்றனா். ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை 176 மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். அஞ்சல் வாக்குப்பதிவு, தோ்தலுக்கு முந்தைய நாள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தோ்தல் நாளன்று காலை முதல் மாலை வரை மேற்கொள்ளவேண்டிய பணிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரின் மேற்பாா்வையாளா்களுக்கு படிவம் 12 ஈ விநியோகம் செய்வது தொடா்பாக காணொலி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.க. சரவணன், துணை மாவட்ட தோ்தல் அலுவலா் ம. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊராட்சிகள்) ஜெகதீசன், உதவி ஆணையா் (கலால்) என்.எஸ். ராஜேஷ்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பிரபாகரன் மற்றும் மண்டல அலுவலா்கள் பங்கேற்றனா்.