முகப்பு
தற்போதைய செய்திகள்

பைனான்ஸில் பைக் பறிக்கப்பட்டதால் வாலிபர் தற்கொலை

பழனி அருகே பாலசமுத்திரம் 7வது வார்டை சேர்ந்தவர் மாரிமுத்து.  இவரது மகன் ராஜா(22). இவர் ஜேசிபி ஆபரேட்டராக உள்ளார். ராஜா கடந்த 2013 ஜனவரி மாதம் மோட்டார் சைக்கிள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:37 AM
பகிர்:

பழனி அருகே பைனான்ஸியர்கள் பைக்கை பறித்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

பழனி அருகே பாலசமுத்திரம் 7வது வார்டை சேர்ந்தவர் மாரிமுத்து.  இவரது மகன் ராஜா(22). இவர் ஜேசிபி ஆபரேட்டராக உள்ளார். ராஜா கடந்த 2013 ஜனவரி மாதம் மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார்.  இதற்காக ஆதித்யா ஆட்டோ பைனான்ஸில் கடன் வாங்கியுள்ளராம். இதற்கான மூன்று மாத தவணையை கட்டாததால் சனிக்கிழமை பைனான்ஸில் இருந்து வந்த சிலர் பைக்கை பறித்து சென்றுவிட்டனர்.  ஞாயிற்றுக்கிழமை காலை ராஜாவின் அறை நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து திறந்து பார்த்த போது கைலியில் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  இதுகுறித்து மாரிமுத்து(50) கொடுத்த புகாரின் பேரில் பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.