முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை அருகே வாகனச் சோதனையில் ரூ. 1.47 லட்சம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ. 1.47 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:41 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்  உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ. 1.47 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத்  தொகுதிகளுக்கும் பறக்கும்படை, கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு் வருகிறது.

ஆலங்குளம் அருகே அத்தியூத்தில் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குளம் காமராஜர்நகரை சேர்ந்த காய்கறி வியாபாரி கோமதிநாயகம் வந்த காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1.47 லட்சம் இருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தனர். மொத்த வியாபாரியான கோமதிநாயகம் கேரளாவில் இருந்து பணம் வசூல் செய்து விட்டு வரும்போது, சோதனையில் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் பறக்கும்படை வட்டாட்சியர் கணேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →