முகப்பு
தற்போதைய செய்திகள்

விபத்து நஷ்டஈடு வழங்காததால் நெல்லையில் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் வலது கால் முறிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட முதியவருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டஈடு வழங்காததால் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர் ஜப்தி செய்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:41 AM
பகிர்:

விபத்தில் வலது கால் முறிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட முதியவருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டஈடு வழங்காததால் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர் ஜப்தி செய்தார்.

பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்தவர் முத்துபாண்டி மகன் ராமச்சந்திரன்
(59). கடந்த 23.01.2011 அன்று மேலப்பாளையத்தில் அரசு பஸ் மோதியதில் ராமச்சந்திரனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு முறிந்தது. இதையடுத்து விபத்து நஷ்ட ஈடு வழங்குமாறு திருநெல்வேலி தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ராமச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கில் விபத்தில் பாதிக்கப்பட்ட ராமச்சந்திரனுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டஈடாக ரூ. 3.22 லட்சம் வழங்க வேண்டும் என்றும், அத்தொகையை 7.5 சதவிகிதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று 06.07.2013 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தொகையை 7.5 சதவிகிதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.


எனினும் அரசு போக்குவரத்துக் கழகம் ராமச்சந்திரனுக்கு நஷ்டஈடு தொகையினை வழங்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தங்கமாரியப்பன், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை புதிய பஸ் நிலையத்தில் வைத்து மதுரை செல்லும் பைபாஸ் ரைடர் விரைவு பேரூந்தை நீதிமன்ற ஊழியர் மாரிக்கண்ணன் ஜப்தி செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →