முகப்பு
தற்போதைய செய்திகள்

காட்டுமன்னார்கோயிலில் ரூ.ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க, பயனாளியிடம் ரூ.ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் மலர்விழியை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:41 AM
பகிர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க, பயனாளியிடம் ரூ.ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் மலர்விழியை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோயில் வட்டம் டி.புத்தூர் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் மலர்வழி (54). இவர் ம.உத்தமசோழகன் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (60) என்பவரிடம் இலவச மனைப்பட்டா குறித்து விண்ணப்பத்தை பரிசீலனை செய்து பரிந்துரை செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கோவிந்தசாமி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.

அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி உதயசங்கர், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீஸார் புதன்கிழமை ரசாயண பவுடர் தடவிய ஆயிரம் ரூபாய் பணத்தை கோவிந்தசாமியிடம் அளித்து வழங்குமாறு தெரிவித்தனர். அதன்பேரில் கோவிந்தசாமி புதன்கிழமை காலை காட்டுமன்னார்கோயில் ரெட்டியார் ரோட்டில் பைசல் காம்பளக்ஸில் வசிக்கும் வருவாய் ஆய்வாளர் மலர்விழி வீட்டிற்கு சென்று ரூ.ஆயிரத்தை வழங்கியுள்ளார்.

Advertisement

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மலர்விழியை கைது செய்து, லஞ்ச பணம் ரூ.ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments