தற்போதைய செய்திகள்

வாகன சோதனையில் ரூ.7.45 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டம ராசிபுரம் அருகே மெட்டாலா சோதனைச் சாவடியில் கூட்டுறவுத் துறை அலுவலர் குணசேகரன் தலைமயிலான பறக்கும்படை குழு புதன்கிழமை காலை தீவிர

தமிழ்ச்செல்வன்

ராசிபுரம் அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி இரு முட்டை லாரிகளில் கொண்டு வரப்பட்ட ரூ.7.45 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டம ராசிபுரம் அருகே மெட்டாலா சோதனைச் சாவடியில் கூட்டுறவுத் துறை அலுவலர் குணசேகரன் தலைமயிலான பறக்கும்படை குழு புதன்கிழமை காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்போது சென்னையிலிருந்து நாமக்கல்லில் முட்டைகளை கொண்டு செல்வதற்காக வந்து கொண்டிருந்த இரு லாரிகளை பிடித்து சோதனையிட்டனர்.

அப்போது ஒரு லாரியில் இருந்த சென்னை புளியம்தோப்பைச் சேர்ந்த குணசேகரன்(41) என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.2,50,500 தொகையும், மற்றொரு லாரி ஓட்டுநர் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜா(27) என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.4.95 லட்சம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் நாமக்கல்லுள்ள பண்ணைகளில் முட்டைகளை வாங்கி சென்னைக்கு கொண்டு செல்வதற்காக வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.7,45,500 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த தொகையை மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் லாரி ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT