ஜெ.குரு எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
சாதி உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியதாக பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு மீது புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சாதி உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியதாக பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு மீது புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி பேருந்து நிலையம் அருகே கடந்த மார்ச் 6-ம் தேதி பாமக வேட்பாளர் கி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெ.குரு எம்எல்ஏ பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை பின்பற்றாமலப் சாதி உணர்வுகளை தூண்டு வகையில் பேசியதாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கனிமொழி எம்பி, திரைப்பட இயக்குநர் சேரன் உள்ளிட்டோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், நிருபணம் ஆகாத யூகத்தின் பேரில் முதல்வர் மீதும், ஒரு கட்சியை பற்றியும் குற்றம் சுமத்தியது, சாதி பெயரை சொல்லி வாக்கு சேகரித்ததாகவும் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி உதவித் தேர்தல் அலுவலர் தங்கவேல் புவனகிரி காவல் நிலையத்தில் புதன்கிழமை மனு அளித்தார். அதன் பேரில் புவனகிரி போலீஸார் ஜெ.குரு எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Advertisement