தாய் அடித்துக் கொலை: மனநலம் பாதித்த மகன் வெறிச் செயல்
கொடுங்கையூர் கண்ணதாசன்நகரைச் சேர்ந்தவர் லா. மேரி (58). இவர் மகன் பிரபு (37). மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சென்னை கொடுங்கையூரில் மனநலம் பாதித்த மகன் தாயை அடித்துக் கொலை செய்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கொடுங்கையூர் கண்ணதாசன்நகரைச் சேர்ந்தவர் லா. மேரி (58). இவர் மகன் பிரபு (37). மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Advertisement
இந்நிலையில் மேரியும், பிரபும் வியாழக்கிழமை வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென பிரபு, மேரியை தாக்கத் தொடங்கினராம். மேலும் மேரி தலையை சுவற்றில் பிரபு அடித்ததால், அவர் அலறினார். இதில் பலத்த காயமடைந்த மேரி, மயங்கி விழுந்தார்.
இதற்கிடையே மேரியின் அலறல் சத்தத்தை கேட்ட அப் பகுதி மக்கள், பிரபு வீட்டுக்கு வந்தனர். அப்போது தலையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்த மேரியை அவர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் செல்லும் வழிலேயே மேரி இறந்தார்.
இது குறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிரபுவை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.