முகப்பு
தற்போதைய செய்திகள்

தேர்தல் அலுவலர்கள் வியாபாரிகளிடம் கெடுபிடி செய்யக் கூடாது: வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

சோதனை என்ற பெயரில் வியாபாரிகளிடம் கெடுபிடியாக நடந்துகொள்வதை தவிர்க்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

சோதனை என்ற பெயரில் வியாபாரிகளிடம் கெடுபிடியாக நடந்துகொள்வதை தவிர்க்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு களக்காடு வியாபாரிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.சி. ராஜன் வியாழக்கிழமை அனுப்பிய மனு விபரம் :

களக்காட்டில் உள்ள வியாபாரிகள் மளிகை, வாழைக்காய், ஜவுளி, காய்கனி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொள்முதல் செய்வதற்காக திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் பயணிக்கும் நிலை உள்ளது. பணத்தை ரொக்கமாக கொண்டு செல்லும் போது தேர்தல் அதிகாரிகள் கெடுபிடியாக நடந்து கொள்வதால் வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது.

இதனால் அவர்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வியாபாரிகளின் நலன்களை கருத்தில் கொண்டு, வியாபார வகைக்காக பணம் கொண்டு செல்லும் போது அவர்களிடம் கெடுபிடி செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.