நெய்வேலி-கோயம்புத்தூர், கொடைக்கானல் தடங்களில் பேருந்துகள் இயக்க கோரிக்கை
நெய்வேலியிலிருந்து கோயம்புத்தூர், கொடைக்கானல், ஊட்டி ஆகிய தடங்களில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என நெய்வேலையைச் சேர்ந்த சமூகசேவகர் எஸ்.சகாதேவன்
நெய்வேலியிலிருந்து கோயம்புத்தூர், கொடைக்கானல், ஊட்டி ஆகிய தடங்களில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என நெய்வேலையைச் சேர்ந்த சமூகசேவகர் எஸ்.சகாதேவன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து மனு அனுப்பியுள்ளார்.
மனுவிபரம்: நெய்வேலி நகரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை திறக்க தாங்கள் உத்தரவிட்டதினால், நெய்வேலி வாழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அதே வேளையில் எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளான கீழ் கண்ட நகரங்கள் வழியாக செல்லும் வகையில் புதிய தடங்களில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெய்வேலி டவுன்ஷிப்பிலிருந்து விருத்தாசலம், ஆத்தூர், ராசிபுரம், திருச்செங்கோடு, ஈரோடு, பெருந்துரை, பெருமாநல்லூர், அவிநாசி, அன்னூர், மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக ஊட்டிக்கு தினமும் இரவு இருவழிப்பயணமாக பேருந்துகள் இயக்க வேண்டும். அதேபோல் நெய்வேலி டவுன்ஷிப்பிலிருந்து, விருத்தாசலம், ஆத்தூர், சேலம், கோயம்புத்தூருக்கு தினமும் காலை, மாலை இருவழிப்பயணமாக பேருந்துகள் இயக்க வேண்டும்.
நெய்வேலி டவுன்ஷிப்பிலிருந்து விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொட்க்கானலுக்கு தினமும் இரவு இருவழிப்பயணமாக பேருந்துகள் இயக்க வேண்டும் என மனுவில் எஸ்.சகாதேவன் தெரிவித்துள்ளார்.