பண்ருட்டி 4 முனை சந்திபில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியல்: 200க்கும் மேற்பட்டோர் கைது
கடந்த சில நாட்களுக்கு முன் சேக்கோட்டையில் நடந்த கோஷ்டி மோதலில் பலர் காயம் அடந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சேக்கோட்டையில் நடந்த கோஷ்டி மோதலில் பலர் காயம் அடந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தனர்.
அவர்களை தமிழ்க வாழ்வுரிமைக்கட்சி ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் சில மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்ததாக கூறி போலீஸார் வழக்கு பதிவு செய்து இன்று சிவகுமாரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து 200க்கும்மேற்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கலைந்து செல்ல வலியுறுத்திய போது போலீஸாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்துவைத்துள்ளனர்.