முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் மின்சக்தி ஆளுமை குறித்த சர்வதேச பயிற்சி முகாம்: ஷிவ்தால்மீனா தொடங்கி வைத்தார்

இப்பயிற்சி முகாமை அமெரிக்காவில் உள்ள டென்னசி டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழக மின்னாற்றல் சக்தி ஆராய்ச்சி மையமும், அண்ணாமலைப் பல்கலை பொறியியல் புலமும் இணைந்து நடத்துகிறது. பல்கலைக்கழக

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:43 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் எலக்டிரிகல் எனர்ஜி ஆளுமையில் நவீன யுக்திகள் என்ற தலைப்பிலான 3 நாள் சர்வதேச பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இப்பயிற்சி முகாமை அமெரிக்காவில் உள்ள டென்னசி டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழக மின்னாற்றல் சக்தி ஆராய்ச்சி மையமும், அண்ணாமலைப் பல்கலை பொறியியல் புலமும் இணைந்து நடத்துகிறது. பல்கலைக்கழக பொறியியல் புல ஆம்டெக் ஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்கவிழாவில் பல்கலைக்கழக நிர்வாகியும், அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பயிற்சியை தொடங்கி வைத்துப் பேசுகையில் "எலக்டிரிகல் எனர்ஜி ஆளுமை குறித்து ஆய்வுகளை பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.

பொறியியல் புல முதல்வர் செ.வேலுசாமி தலைமை வகித்தார். டென்னசி பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் இந்திரனில் பட்டாச்சாரியா, சினிடர் எலக்டிரிகல் கம்பெனி தென்கிழமை ஆசிய பகுதி இயக்குநர் சிவப்பிரகாஷ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எலக்டிரிகல் எனர்ஜி ஆளுமையில் நவீன யுக்திகளின் அவசியம் குறித்துப் பேசினார். மூன்று நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கில் தமிழகத்தின் மின்சக்தி திட்டங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் அதற்கான நிவர்த்தி செய்யும் முறைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது என முகாம் இயக்குநர் முனைவர் செ.வேலுசாமி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.