சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல்! தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை
சிதம்பரம் வடக்குமெயின்ரோடு அண்ணா கலையரங்க வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனின் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் இயங்கி வருகிறது
சிதம்பரம் நகரில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திற்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் படி, தேர்தல் அலுவலர்கள் சனிக்கிழமை சீல் வைத்தனர்.
சிதம்பரம் வடக்குமெயின்ரோடு அண்ணா கலையரங்க வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனின் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் இயங்கி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியும், விதிமுறைகள் படியும் தேர்தல் முடியும் வரை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் இயங்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிதம்பரம் தொகுதி மண்டல தேர்தல் அலுவலர்களான வட்டாட்சியர் எம்.விஜயா, வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அலுவலர்கள் திருமூர்த்தி ஆகியோர் சனிக்கிழமை சென்று சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும் தேர்தல் முடியும் வரை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் இயங்காது என நோட்டீலை ஒட்டிவிட்டு சென்றனர்.